சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சங்கரநாராயணனுக்கு தேசிய விருது
இந்த ஆண்டுக்கான சி.என்.ஆர். ராவ் தேசிய விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறை பேராசிரியர் சங்கரநாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்திய வேதியியல் ஆராய்ச்சி சமூகம் சார்பில் வேதியியல் துறையில் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சி.என்.ஆர். ராவ் தேசிய விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறை பேராசிரியர் சங்கரநாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் படிப்பினை நிறைவு செய்துள்ளார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்துள்ளார். காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக வேதியியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி அனுபவம் பெற்றவர்.
Related Tags :
Next Story