பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் சோதனை குழாய் மூலம் 11 தம்பதிகளுக்கு 14 குழந்தைகள்


பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் சோதனை குழாய் மூலம் 11 தம்பதிகளுக்கு 14 குழந்தைகள்
x
தினத்தந்தி 29 Sept 2017 5:30 AM IST (Updated: 29 Sept 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில், கடந்த ஜனவரி மாதம் சோதனை குழாய் (டெஸ்ட் டியூப்) சிகிச்சை மூலம் 11 தம்பதிகள் கருவுற்றனர்.

பழனி,

இதில் 5 தம்பதிகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 6 தம்பதிகள், 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இதில் 40 வயதுக்கு மேல் கருத்தரித்த 3 தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. மொத்தத்தில் 11 தம்பதிகளுக்கு 6 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என மொத்தம் 14 குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் அனைத்தும் நல்ல எடையுடனும், ஆரோக்கியத்துடனும் உள்ளனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் தலைமை டாக்டர் சந்திரலேகா நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 30 வருடங்களாக குழந்தை இல்லா தம்பதியர்களுக்கு வாரிசை ஏற்படுத்தி தந்துள்ளது ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம். இங்கு உயர்ந்த தரத்தில் மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சோதனை குழாய் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பு சதவிகிதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நவீன சிகிச்சையின் மூலம் 95 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.


Next Story