மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பழுதாகி கிடக்கும் சாலைகளை சீரமைக்காதது ஏன்?
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பழுதாகி கிடக்கும் சாலைகளை சீரமைக்காதது ஏன்? என்று நவம்பர் 8-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் மழைக்காலத்தை யொட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி, உயிர் இழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனை மிகவும் தீவிரமாக கருதிய மும்பை ஐகோர்ட்டு, இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக கையில் எடுத்தது. மேலும், இதில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மும்பை மாநகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலைகள் மும்பை நகரை மட்டும் பாதிக்கவில்லை. மாநிலத்தின் சிறிய நகரங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அங்கேயும் சாலைகள் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.
சாலைகளை சீரமைக்க நிதி பற்றாக்குறை முதன்மை காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். இதனால் தான் அதிகாரிகளால் சாலைகளை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும் இயலவில்லை.
சாலைகளை பழுதுபார்ப்பதற்கு இடையூறாக இருப்பது பற்றியும், சாலை விபத்துக்கான காரணங்கள் பற்றியும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர்கள், நகர்புற மேம்பாட்டு துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் நவம்பர் 8-ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story