பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு


பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2017 3:45 AM IST (Updated: 1 Oct 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.

கமுதி,

கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வருகிற 28, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தென்மண்டல ஐ.ஜி. சைலேஸ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. (பொறுப்பு) பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் பசும்பொன் தேவர் நினைவிடம், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதற்கான இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள், ராமச்சந்திரன் ஆகியோர் வந்திருந்தனர்.


Next Story