காந்தி ஜெயந்தியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும்


காந்தி ஜெயந்தியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்,

காந்தி ஜெயந்தியான நாளை( திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும், இந்த கூட்டத்தில் கிராம வளம் மற்றும் தூய்மையான இருவார இயக்கத்தை வருகிற 15–ந்தேதி வரை கொண்டாடுவது குறித்தும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க வேண்டும்

மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதிசெலவின விவரங்கள் குறித்தும் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு குறித்தும் சுகாதாரம் தொடர்பாக திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது குறித்தும், கழிப்பறை இல்லாதோர் விவரபட்டியல் சேகரித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டப்பணிகள், சமூக தணிக்கை குறித்தும் மகளிர் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்படவேண்டும்.

கிராமசபை கூட்டங்களுக்கு பிறதுறைகளை சேர்ந்த அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story