ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மர்மச்சாவு


ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 1 Oct 2017 3:00 AM IST (Updated: 1 Oct 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கடந்த 27–ந்தேதி மோகன் வீட்டுக்கு பால் போடுவதற்காக பால்காரர் வந்தார். வெகுநேரமாக வீட்டு கதவை தட்டியும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி மோகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story