திருத்தணி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் 3 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்பு


திருத்தணி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் 3 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Oct 2017 3:15 AM IST (Updated: 1 Oct 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் 3 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள கோரமங்கலத்தை சேர்ந்தவர் ரங்கராஜுலு (வயது 74) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திருத்தணிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் திருத்தணி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கராஜுலுவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் திருத்தணி–சித்தூர் சாலை முருகூர் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அநத தரை கிணற்றில் முதியவர் ஒருவர் உள்ளே உள்ள படிக்கட்டில் நடுங்கிய படி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் அங்கு உடனடியாக வந்து கிணற்றில் விழுந்த முதியவரை கயிறுகட்டி மீட்டு மேலே கொண்டு வந்தார்கள். பின்னர் அவரிடம் விசாரித்த போது அவர் கோரமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும் மாயம் ஆன ரங்கராஜுலு அவர்தான் என்பது தெரியவந்தது. கால் கழுவ வந்தவர் தவறி விழுந்து விட்டார் என்பதும் வயது முதிர்வு காரணமாக மேலே வரமுடியாமல் அவர் கடந்த 3 நாட்களாக கிணற்றில் இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முதியவர் ரங்கராஜுலுவை அவரது உறவினாகளிடம் ஒப்படைத்தார்கள்.

திருத்தணி அருகே உள்ள முரக்கம்பட்டு காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35). கூலித்தொழிலாளி. அவரது மகள் விஜயஸ்ரீ (1½ ) நேற்று காலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது விஜயஸ்ரீ வீட்டின் அருகில் உள்ள 80 அடி பள்ளத்தில் தவறி விழுந்து விட்டாள். விஜயஸ்ரீயின் தந்தை விஜயராகவன் உடனே அங்கு ஓடிவந்து மற்றவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டார்.

இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story