மின்தேவை குறைவு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்


மின்தேவை குறைவு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆயுதபூஜை விடுமுறை மற்றும் மின்சார தேவை குறைவு காரணமாக 2–வது யூனிட்டில் 1,200 மெகாவாட், முதல் யூனிட்டில் இரண்டாவது அலகின் 210 மெகாவாட் என மொத்தம் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story