கோவிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டிய பூசாரி


கோவிலில் பக்தர்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டிய பூசாரி
x
தினத்தந்தி 1 Oct 2017 4:00 AM IST (Updated: 1 Oct 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே கோவிலில் பேய் விரட்டும் நிகழ்ச்சியில், பக்தர்களை சாட்டையால் பூசாரி அடித்தார்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பவித்திரம் அருகே வெள்ளாளப்பட்டியில் அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று விஜயதசமியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

இதன்பின்னர் தப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பேய் விரட்டும் நிகழ்ச்சி

இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் கோவில் அருகில் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து இருந்தனர்.

கோவில் பூசாரி அங்கு வந்து அந்த பக்தர்கள் மீது சாட்டையால் அடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story