நொகனூர் காப்புக்காட்டில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு
நொகனூர் காப்புக்காட்டில் உள்ள யானைகள் நடமாட்டத்தினை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா காப்புக்காட்டில் இருந்து ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேவர்பெட்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வனப்பகுதிக்கு வருகின்றன. இவைகள் பல குழுக்களாக பிரிந்து அஞ்செட்டி, அய்யூர், ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. இவைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
ஆளில்லா குட்டி விமானம்
தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட வனஅலுவலர் தீபக்வில்ஜி, பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் யானைகள் வனப்பகுதிக்குள் இருப்பதை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.
அவருடைய உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு அலுவலர்கள் 25 பேர் அடங்கிய குழுவினர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 6 காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
வனத்துறையினர் தீவிரம்
பின்னர் யானைகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவைகளை பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் ஓசூர் வனப்பகுதியில் இருந்து நொகனூர் காப்புக்காட்டிற்கு விரட்டியடித்தனர். தற்போது 6 யானைகளும் நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. அவைகளின் நடமாட்டத்தை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Tags :
Next Story