குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
நாகை அருகே குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த பனங்குடியில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென வாலிபர் ஒருவர் ஏறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாகை தீயணைப்பு துறை மற்றும் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்ற வாலிபரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்காமல் தற்கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டே கோபுரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார்.
குடிபோதை
இதையடுத்து தீயணைப்பு படையினர் கோபுரத்தில் ஏறி அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் டேவிட் (வயது26) என்பதும், அவர் குடிபோதையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறியதும், போலீசாரை கண்டவுடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டேவிட்டை ஜீப்பில் ஏற்றி நாகூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story