நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி 10-ந்தேதி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி வருகிற 10-ந்தேதி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பாலமுருகன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
முற்றுகை போராட்டம்
நீட் தேர்வினால் ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்வி குறியாகியுள்ளது. மாநில அரசின் உரிமையினையும், சமூக நீதியை பறிக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இரு மொழி மற்றும் தாய்மொழி கொள்கைக்கு எதிராக உள்ள நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி திருவாரூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story