திருச்சியில், 6 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்


திருச்சியில், 6 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில், 6 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மள,மளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 குடிசை வீடுகள் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து நடந்த பகுதிக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.


Related Tags :
Next Story