திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது வெல்லமண்டி நடராஜன் அறிக்கை


திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடக்கிறது வெல்லமண்டி நடராஜன் அறிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2017 4:15 AM IST (Updated: 1 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.

திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் எனது (அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்) தலைமையில் நடக்கிறது.

இதில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், செயல் வீரர்கள்-வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

Related Tags :
Next Story