பஸ் கண்டக்டர் கொலையில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
புதுவையில் பஸ் கண்டக்டர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விபசார அழகியை தேடிச் சென்ற போது இந்த சம்பவத்தை நடத்தியதாக போலீசில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே புதுக்குளம் பழைய தேங்காய்திட்டு பகுதியில் சாலையையொட்டி இருந்த பள்ளத்தில் கடந்த 28-ந் தேதி கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அரியாங்குப்பம் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை வைத்து விசாரித்ததில் கொலை செய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகத்தின் மகன் அருள் (வயது 32) என்பது தெரியவந்தது. தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அவர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தது.
இதை வைத்து தீவிரமாக விசாரித்ததில், சம்பவத்தன்று அதாவது 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை அருள் தனது மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அவர் விபசார அழகி என்று கூறப்படுகிறது.
காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 சிறுவர்களுடன் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் (வயது 19) என்பவர் வந்தார்.
அருளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை ஏற்கனவே தெரியும் என்பதால் அந்த பெண்ணை கீழே இறங்கச் செய்து அவரை பெருமாள் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அருள் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பெருமாளும், அந்த பெண்ணும் செல்லும் இடம் தங்களுக்கு தெரியும் என்று அருளிடம் பெருமாளுடன் வந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த பெண்ணை அருள் தேடிச் சென்றார். அப்போது தான் வழியில் பழைய தேங்காய்திட்டு பகுதியில் வைத்து பணம் கேட்டு அருளை கொலை செய்து விட்டு சிறுவர்கள் இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அரியாங்குப்பத்தை சேர்ந்த பாலாஜி (20), பெருமாள் (19), சதீஷ்குமார் (19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கைக்கடிகாரம், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் போலீசாரால் சிறுவர்கள் 2 பேரும் அரியாங்குப்பம் சீர்த்திருத்தப் பள்ளியிலும், பெருமாள், பாலாஜி, சதீஷ்குமார் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
பஸ் கண்டக்டர் அருள் கொலை தொடர்பாக கைதான 5 பேர் வாக்குமூலம் அளித்து இருப்பது குறித்து போலீசார் கூறியதாவது:-
கடந்த 27-ந் தேதியன்று அருளுடன் வந்த பெண்ணை பெருமாள் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். அவருடன் வந்து இருந்த 17வயதுக்குட்பட்ட 2 சிறுவர்களும் அருளிடம் சென்று அழகியை அழைத்து செல்லும் இடம் தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளனர். உடனே அருள் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அரியாங்குப்பத்தில் உள்ள காலி மனைக்கு சென்றார்.
அங்கு யாரும் இல்லாத இடத்தில் வைத்து அந்த சிறுவர்களிடம் பெருமாள் எங்கே என்று விவரம் கேட்டார். அப்போது அந்த சிறுவர்கள், அருளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, சிறுவர்கள் அருளை சரமாரியாக வெட்டினார்கள். அருளின் கழுத்தையும் அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் இதுகுறித்து பெருமாளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெருமாள் தனது நண்பர்களான அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, சதீஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து கொலையை மறைக்க முயன்றது தெரியவந்தது. இதன்காரணமாக அவர்களும் போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story