உயிரிழந்தவர்களின் நெற்றியில் எண்ணால் எழுதியதால் சர்ச்சை
மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
இதில் பலியானவர்களை அடையாளம் காணும் வகையில் பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள் அவர்களின் நெற்றியில் 1,2,3.. என எண்ணால் எழுதி இருந்தனர். இது பலியானவர்களின் குடும்பத்தினர் இடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதேபோல பொது மக்களும் இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று பிரேத பரிசோதனை அறைக்குள் சிவசேனா தொப்பி அணிந்த 5 பேர் நுழைந்தனர். அவர்கள் பலியானவர்களின் நெற்றியில் எண்ணை எழுதியதை கண்டித்து அங்கு இருந்த டாக்டர் ஹரிஷ் பாதக்கை தாக்கினர். மேலும் அவரது நெற்றியில் எண்ணை எழுத முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த 5 பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story