ரெயில் நிலைய நடைமேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
ரெயில் நிலைய நடைமேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மும்பையில் ரெயில் நிலைய நடைமேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். அவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஷரத்தாவும் ஒருவர். இவர் எல்பின்ஸ்டன் ரோட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதே அலுவலகத்தில் தான் அவரது தந்தை கிஷோரும் (வயது 57) வேலை பார்க்கிறார். 2 பேரும் ஒரே அலுவலகம் என்பதால் தினமும் ஒன்றாகவே பணிக்கு வந்து செல்வார்கள்.
சம்பவத்தன்று ஷரத்தா தந்தையுடன் பொது பெட்டியில் வராமல் பெண்கள் பெட்டியில் பயணம் செய்தார். எல்பின்ஸ்டன் ரோடு வந்ததும், கிஷோர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தால் மழையில் நனைந்துவிடுவோம் என நினைத்து நடைமேம்பாலத்தில் ஒதுங்கி நின்ற ஷரத்தா, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், பிரேத பரிசோதனை அறையில் மகளின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ந்து போன கிஷோர், கதறி அழுதார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறும்போது, “முன்னால் போங்க அப்பா, நான் பின்னால் வருகிறேன் என்று என் மகள் என்னிடம் கூறினாள். இது தான் அவள் கடைசியாக என்னிடம் உதிர்த்த வார்த்தை” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கடைசி நாள் அலுவலக பயணம்...
மும்பை தாதரை சேர்ந்தவர் தெரசா பெர்ணாடஸ் (39). இவர் லோயர் பரேலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக பஸ்சில் தான் அலுவலகத்திற்கு செல்வார். ஆனால் மழை காரணமாக நேற்று முன்தினம் மின்சார ரெயிலில் அலுவலகத்திற்கு சென்ற போது இந்த துயரம் நடந்துள்ளது.
மேலும் தெரசாவின் அலுவலகம் நேற்று முதல் சாக்கிநாக்காவிற்கு மாற்றப்பட இருந்தது. இந்தநிலையில் லோயர் பரேல் அலுவலகத்திற்கு கடைசி நாள் சென்ற தெரசா, கூட்ட நெரிசலில் உயிரிழந்தது சக ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெரசாவிற்கு 9 மாத கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் தனது 11 வயது மகன் ரோகித்தை பறிகொடுத்த அங்குஷ் என்பவர் கூறுகையில், “நான் விக்ரோலியில் பூக்கடை நடத்தி வருகிறேன். கடைக்கு பூ வாங்க பெரிய மகன் ஆகாசுடன் (19) ரோகித் பரேல் பூ மார்க்கெட்டுக்கு சென்றான். வழக்கமாக நானும் அவர்களுடன் சென்வேன். நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் அவர்கள் தனியாக சென்றார்கள். கூட்ட நெரிசலால் எனது மகனை பறிகொடுத்துவிட்டேன்” என உருக்கமாக கூறினார். அங்குஷின் மூத்த மகன் ஆகாஷ் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அஞ்சலி
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் சம்பவம் நடந்த எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தை ‘2015-ம் ஆண்டிலேயே புதுப்பிக்க ஒப்புதல் அளித்தேன்’ சுரேஷ் பிரபு தகவல்
மும்பையில் 23 பேரை பலி கொண்ட எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தில், புதிதாக நடைமேம்பாலம் கட்ட சிவசேனா எம்.பி. ராகுல் ஷெவாலேயின் வலியுறுத்தலுக்கு இணங்க கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அப்போதைய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிகாரத்துவ காரணங்களால் புதிய நடைமேம்பால கட்டுமான பணி தடைப்பட்டதாகவும், நிர்வாகம் துரிதமாக செயல்பட்டிருந்தால் இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Tags :
Next Story