மக்கள் நலனுக்காக அரசில் தொடர்ந்து நீடிப்போம் சிவசேனா ‘பல்டி’


மக்கள் நலனுக்காக அரசில் தொடர்ந்து நீடிப்போம் சிவசேனா ‘பல்டி’
x
தினத்தந்தி 1 Oct 2017 5:48 AM IST (Updated: 1 Oct 2017 5:48 AM IST)
t-max-icont-min-icon

“மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசில் சிவசேனா தொடர்ந்து நீடிக்கும்” என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மும்பை,

ஆளும் பாரதீய ஜனதா மீது கூட்டணி கட்சியான சிவசேனா அடிக்கடி விமர்சனங்களையும், கேள்வி கணைகளையும் தொடுக்கிறது. மேலும், சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவுத் எம்.பி., “அரசில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று கூறி, பா.ஜனதாவுக்கு சமீபத்தில் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இந்த நிலையில், சிவசேனா அதன் நிலைப்பாட்டில் இருந்து ‘பல்டி’ அடித்தது. இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:-

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் தான் இருக்கிறது. இந்த தருணத்தில் கூட்டணியை சிவசேனா முடிவுக்கு கொண்டு வராது. மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்சியில் தொடர்ந்து நீடிப்போம்.

மத்திய அரசு மற்றும் ரெயில்வேயின் அக்கறையின்மை காரணமாக தான் மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி, 23 பேர் பலியாகி இருக்கின்றனர். உள்ளூர் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல், புல்லட் ரெயில் விட்டு என்ன பயன்?.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

Next Story