மும்பை ரெயில் நிலைய நடைமேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலி: ரெயில்வே மந்திரி அவசர ஆலோசனை
இதன் காரணமாக இங்குள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளோ, போதிய மின்சார ரெயில்களோ இல்லை.
மும்பை,
எனவே காலை, மாலை நேரங்களில் ரெயில் நிலைய நடைபாதை, நடைமேம்பாலங்களில் பயணிகள் நெரிசலில் சிக்கித் தவிப்பார்கள்.
ஆயுதபூஜை தினமான நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் மும்பையில் பலத்த மழை பெய்தது. எல்பின்ஸ்டன் ரோடு மற்றும் பரேல் ரெயில் நிலையத்தை இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் பயணிகள் கூட்டமாக சென்று கொண்டு இருந்தனர். பலர் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். இதனால் மேம்பாலத்தில் கூட்டம் அலைமோதியது.
அப்போது ரெயில் நிலையத்தில் மின்சார வயர் அறுந்து மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் பீதியில் அவசரமாக அங்கிருந்து வெளியே செல்ல பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு பகுதி அந்த நடைமேம்பாலத்திலும் ஏறியதால் மேலும் நெரிசல் ஏற்பட்டது.
பாலத்தின் ஒரு பகுதி தகர கூரை உடைந்து விழுந்ததால் மேலும் பதற்றம் அதிகரித்து பாலம் இடிந்து விழப்போவதாக வதந்தி பரவியது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் அந்த நடைமேம்பாலம் வழியாக வெளியேற முயன்றனர். நிலைதடுமாறி கீழே விழுந்தவர்கள் மீது மற்ற பயணிகள் ஏறி மிதித்து சென்றதால் உடல்நசுங்கினர். பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த 23 பேர் இறந்துவிட்டதாக ஆஸ்பத்திரி அறிவித்தது. மேலும் காயமடைந்த 39 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பலியானவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், ரெயில்வே தலா ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ரெயில்வே ஊழியர்கள் தசரா பண்டிகை கொண்டாட்டத்தை கைவிட்டனர்.
விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மும்பை சர்ச்கேட்டில் உள்ள மேற்கு மண்டல ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மின்சார ரெயிலின் உட்கட்டமைப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், பரேல் டெர்மினஸ் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிய அவர், இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதோடு, மும்பையில் அனைத்து புறநகர் ரெயில் நிலைய வாயில்களை புதுப்பிக்க தெளிவான திட்டம் வகுக்குமாறும், பயணிகள் வசதிகளை உடனடியாக மேம்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ரெயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டதாக கருதப்பட்டது. அது இனி மிகவும் அவசியமானதாக கருதப்படும். அதன் அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நடைமேம்பாலங்கள் ஏற்படுத்தப்படும்.
மும்பை மின்சார ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் 15 மாதங்களில் பொருத்தப்படும். அதன்பின்னர், நாடு முழுவதும் அனைத்து ரெயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பை ஐகோர்ட்டில், பிரதீப் பலேக்கர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Related Tags :
Next Story