வித்தியாசமான மத்திய மந்திரி
மத்திய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம்- கலாசாரம்- சுற்றுலா போன்ற துறைகளுக்கு தனிப்பொறுப்புகளுடன் கூடிய இணை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற அல்போன்ஸ் கண்ணாந்தானம் விவசாய குடும்பத்தில் பிறந்த வித்தியாசமான மனிதர்.
மத்திய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம்- கலாசாரம்- சுற்றுலா போன்ற துறைகளுக்கு தனிப்பொறுப்புகளுடன் கூடிய இணை மந்திரியாக சமீபத்தில் பொறுப்பேற்ற அல்போன்ஸ் கண்ணாந்தானம் விவசாய குடும்பத்தில் பிறந்த வித்தியாசமான மனிதர். 11 குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தவர். ஐ.ஏ.எஸ். தேறி கலெக்டராகி, பின்பு அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆகி, இப்போது மத்திய மந்திரியாகியிருக் கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
“மணிமலை என்ற சிறிய கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற கொள்கையுடைய விவசாயி அவர். பள்ளி ஆரம்பிக்க மணி அடிக்கும் வரை தோட்டத்தில் நின்று வேலை செய்துகொண்டிருப்பார். பெற்றோருக்கு நாங்கள் ஒன்பது குழந்தைகள். கூடுதலாக அவர் இரண்டு குழந்தைகளை தத்துஎடுத்தார். அதனால் நாங்கள் 11 குழந்தைகள் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வளர்ந்துவந்தோம்.
பள்ளிக்கூடம் செல்லும் முன்பே நாங்கள் தோட்டத்தில் இறங்கி விவசாய வேலை செய்வோம். அம்மாவும் எங்களோடு வேலைபார்ப்பார். எங்களை வரிசையாக நிற்கவைத்து வேலைசெய்ய சொல்வார்கள். யாராவது ஒருவர் நழுவிப்போனாலும் கண்டிப்பார்கள். நாங்கள் ஆற்றில் வலைவீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடிப்போம். இயற்கையை ரசித்து வளர்ந்தோம். அப்படி வளர்ந்தால்தான் மனிதர்களோடு அன்பு உண்டாகும். நாங்கள் வீட்டு வேலை செய்பவர்களோடு அமர்ந்துதான் உணவருந்துவோம். எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கை அப்போதே எங்கள் மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது.
நான் ஒரு கனவை நோக்கி பயணிப்பவன். அதை அடையும் வரை முயற்சி செய்யும் தைரியம் எனக்கு உண்டு. அதற்காக கடினமாக உழைக்கக் கூடிய மனதும் எனக்கு உண்டு. தோற்கலாம்.. ஜெயிக்கலாம்.. ஆனால் எப்போதும் நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
இந்த ஜென்மம் நமக்கு ஒன்றுதான். மீதமுள்ள காலத்தில் புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றியதால் ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்தேன். ஆனால் இனி எத்தனை ஜென்மம் கிடைத்தாலும் நான் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும். ஏன்என்றால் அதிகாரம் நிறைந்த, மக்களுக்கு உதவ முடிந்த பணி அது. ஆனால் ஒவ்வொரு ஜென்மத்திலும் நான் ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமாவும் செய்து விடுவேன்” என்று கூறி சிரிக்கிறார், அல்போன்ஸ் கண்ணாந்தானம்.
“இவர் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அப்போதிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். வாக்குவாதம் செய்து எப்படியோ 22 வருடங்கள் தடுத்துநிறுத்திவிட்டேன். அப்போதுதான் பென்ஷன் கிடைக்கும். டெல்லியில் நில ஆணையாளராக இருந்தபோது, சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்துதள்ளினார். அதனால் நிறைய மிரட்டல்களை சந்திக்கவேண்டியதிருந்தது. அவருக்கு தைரியம் அதிகம். எதற்கும் பயப் படமாட்டார்” என்று கணவரைப் பற்றி பெருமையாக கூறுகிறார், மனைவி ஷீலா.
அல்போன்ஸ் கண்ணாந்தானம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் 242 மதிப்பெண்தான் பெற்றிருந்தார். அதை குறிப்பிட்டுக்கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில்..
“நான் ஒரு சம்பவத்தை சொல்கிறேன். நான் உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த காலம். அப்போது ‘பிளஸ்-டூ’வில் கேரளாவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு கொடுக்க விரும்பினேன். அந்த கூட்டத்தில் முதல் மந்திரியும், இதர மந்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த நம்பர் ஒன் மாணவியிடம், ‘நீ கேரளாவிலே அதிக புத்திசாலி அல்லவா! எளிதான கேள்வி ஒன்றை உன்னிடம் கேட்கிறேன். நீ எதிர்காலத்தில் என்னவாகப்போகிறாய்? என்று கேட்டேன். அவள் சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, நான் வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்’ என்றாள். நான் அந்த மாணவியை கேரளத்திலே நம்பர் ஒன் மந்தபுத்திகொண்டவள் என்பேன். இப்படித்தான் இன்றைய மாணவர்களின் படிப்பு இருக்கிறது. இப்படி படிப்பதால் ஏதாவது பலன் இருக்கிறதா? இவர்களுக்கு மனிதர்கள் பற்றியும் இந்த உலகம் பற்றியும் மற்றவர்களின் கவலை, கண்ணீர் பற்றியும் தெரிவ தில்லை. இதெல்லாம் வகுப்பறையில் இருந்து கிடைக்காது. பெற்றோரிடம் இருந்துதான் கிடைக்கும்..” என்று விளக்கம் தரு கிறார்.
கலை, கலாசாரம், தத்துவம், வாழ்வியலில் ஐந்தாயிரம் ஆண்டுகள் சிறப்பு கொண்ட இந்தியாவின் பெருமைகளை உலக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணாந்தானத்தின் லட்சியமாக இருக்கிறது!

Related Tags :
Next Story