மாணவர்களின் ‘பஸ்’ பணி


மாணவர்களின் ‘பஸ்’ பணி
x
தினத்தந்தி 1 Oct 2017 1:00 PM IST (Updated: 1 Oct 2017 11:39 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு நலப்பணி திட்டம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமான சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாட்டு நலப்பணி திட்டம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமான சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல், விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல், மரக்கன்றுகளை நடுதல், ஏரி, குளங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் அதில் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

அதிலிருந்து மாறுபட்டு கேரள மாணவர்கள் அரசு பேருந்துகளை தூய்மைப் படுத்தி பலதரப்பினரிடையே பாராட்டை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எர்ணா குளத்திலுள்ள மகாராஜா கல்லூரியைச் சேர்ந்தவர்கள். என்.எஸ்.எஸ். தினத்தை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தவர்கள், எர்ணாகுளம் அரசு பஸ் டெப்போவுக்கு சென்று அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகளை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். பஸ்சின் இருக்கைகள், ஜன்னல்கள், பக்கவாட்டு, முகப்பு கண்ணாடிகளை தண்ணீர் ஊற்றி கழுவி தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். மழைக் காலம் தொடங்கும் நிலையில் பேருந்துகளில் படிந்திருந்த அழுக்கள், தூசுகளை அகற்றி தூய்மைப்படுத்தியதற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது. 

Next Story