வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை


வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2017 3:45 AM IST (Updated: 2 Oct 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக்(வயது 25). இவர் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். அதன் பின்னர் அவர் வேலை தேடியும் கிடைக்க வில்லை. இதனால் அவர் வேலை இல்லாத விரக்தியில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கார்த்திக் மது அருந்தினார். பின்னர் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story