குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 2 Oct 2017 3:45 AM IST (Updated: 2 Oct 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் மீது கொலை, வழப்பறி வழக்குகள் உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(வயது 20). இவர் மீது கொலை, வழப்பறி வழக்குகள் உள்ளது. இவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். யுவராஜ் தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சுந்தரவல்லி, தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வரும் யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதற்கான உத்தரவு நகல் புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.


Next Story