மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சாவு


மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சாவு
x
தினத்தந்தி 2 Oct 2017 3:15 AM IST (Updated: 2 Oct 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வையாவூரை சேர்ந்தவர் மணிகண்டன்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வையாவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சஞ்சீதா (வயது 4). கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story