அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த ஒருமுறை மட்டுமே ரூ.200 சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை


அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த ஒருமுறை மட்டுமே ரூ.200 சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை
x
தினத்தந்தி 2 Oct 2017 4:45 AM IST (Updated: 2 Oct 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த ஒருமுறை மட்டுமே ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை,

அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த ஒருமுறை மட்டுமே ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே சந்தாதாரர்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் இடத்தில் செட்டாப் பாக்சை பொருத்தி செயலாக்கம் செய்யப்படுகிறது. அதற்காக ஒருமுறை மட்டும் 200 ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே செட்டாப்பாக்சை பொருத்தி, செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200–க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதல்தொகை ஏதும் செலுத்த தேவையில்லை. இதற்குமேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தொடர்பான புகாரை கட்டணமில்லா தொலைபேசி 18004522911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story