திருப்பூரில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புகுழு திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் குமரன்சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

 ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றுப்பேசினார். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சவுந்தரபாண்டியன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி அச்சுதன், டி.என்.ஜி.இ.எ. சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிஷார் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் பொதுத்துறை ஊழியர்களில் ஒரு பகுதியினரை ஓய்வூதியம் பெற உரிமையற்றவர்களாக மாற்றி வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். ஓய்வூதிய தொகையை குறைக்கும் நடவடிக்கையை மாற்ற வேண்டும். பணி நிறைவு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முடிவில், மாவட்ட இணை செயலாளர் நடராஜ் நன்றி கூறினார்.

Next Story