ராஜா வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் மோகனூர் போய் சேரவில்லை விவசாயிகள் கவலை
ராஜா வாய்க்காலில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை மோகனூர் வாய்க்காலை போய் சேராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் கடந்த மாதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து இருந்தது. இதனால் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் ராஜா வாய்க்காலில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
விவசாயிகள் கவலை
ஆனால் ராஜா வாய்க்கால் தூர் வாரப்படாததால் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக பரமத்தி வேலூரை வந்தடைவதற்கு ஒரு வார காலத்திற்கு மேலானது.
மேலும் கிளை வாய்க்கால் களான பொய்யேரி வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து சேர காலதாமதமானது. மேலும் கொமராபாளையம் வாய்க்கால் கடைமடை பகுதிகளுக்கும் இதுவரை முழுமையாக தண்ணீர் போய் சேரவில்லை. கொமராபாளையம் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி உள்ளது.
மோகனூர் வாய்க்காலுக்கு தனியாக கொரம்பு இல்லாததால் தண்ணீர் இதுவரை போய் சேரவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். மேலும் மோகனூர் வாய்க்காலின் கடைமடை பகுதி வரை உள்ள விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story