400 பேருக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் அசோக்குமார் எம்.பி. வழங்கினார்
மலைக்கிராமங்களை சேர்ந்த 400 பேருக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை அசோக்குமார் எம்.பி. வழங்கினார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் இருதுக்கோட்டை மலைக்கிராமத்தில் பிரதமரின் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அசோக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்கி பேசியதாவது:-
மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெற மலைக் கிராம பகுதிகளை சேர்ந்த 400 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டம், வங்கி கணக்கு தொடங்குவது, முத்ரா வங்கி கணக்கு திட்டம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெற, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
14 ஆயிரம் இணைப்புகள்
இந்த கியாஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 14 ஆயிரம் இணைப்புகள் வழங்க மத்திய அரசு ரூ. 2 கோடியே 24 லட்சம் மானியமாக வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 33 சதவீத மக்களே கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கியாஸ் இணைப்பு வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் சிறுபான்மைபிரிவு மாவட்ட செயலாளர் சையத்அசேன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், வீட்டு வசதி கடன் சங்க தலைவர் ஜெயராமன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் நாராயணன், இருதுக்கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், அஞ்செட்டி கூட்டுறவு வங்கி தலைவர் பெரியதம்பி, வங்கி செயலாளர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story