மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலி

சேலம்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதியுற்று வந்தான். அவனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தான்.
சேலம் மாவட்டம் பொட்டியபுரம் ஊராட்சி மேல்ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகள் ஷாசினி (9). இவள் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக ஷாசினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். அவளை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஷாசினி பரிதாபமாக இறந்தாள்.
இதேபோன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி நாயக்கர் தெரு ராஜேந்திரன் மகள் அகல்யா (11). அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். திடீரென்று அகல்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவளை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அகல்யா பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

Related Tags :
Next Story