26-ந் தேதி திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்
வருகிற 26-ந்தேதி திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.(அம்மா) செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை வருகிற 26-ந்தேதி(வியாழக்கிழமை) திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக சிறப்பாக கொண்டாடுவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
ஆட்சியில் தொடரும்
எம்.ஜி.ஆர். கண்டெடுத்த சின்னமும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்டிக்காத்த வெற்றி சின்னமுமான இரட்டை இலை சின்னத்தை கழக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு மீட்டெடுத்து கழக பணியாற்றுவோம் என சபதம் ஏற்பது. நம் நெஞ்சங்களில் என்றென்றும் வாழும் கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் இனி தமிழகத்தில் வர இருக்கிற உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா அறிவித்தது போல் நூற்றாண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் என்பதை நிரூபிப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரு போதும் நடக்காது
கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது ‘எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கியபோது எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதைப்போன்ற ஒரு உற்சாகம், எழுச்சியை இப்போது தொண்டர்கள் மத்தியில் காண முடிகிறது. இதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும், கட்சியை ஓ.பன்னீர்செல்வமும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு காப்பாற்றி இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பதற்கு முன் அறிவித்த படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் இதுவரை 15 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சியில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் இந்தியாவே வியக்கும் வண்ணம் நாம் கூட்டம் சேர்க்க வேண்டும். டி.டி.வி. தினகரனை ஜெயலலிதா 12 ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கி வைத்து இருந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர் தினகரன் இப்போது உள்ளே வந்து கட்சியையும், ஆட்சியையும் தந்திரமாக கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது’ என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் சகாதேவ் பாண்டி உள்பட முன்னணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story