கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை திருடி செல்ல முயற்சி: ஸ்டுடியோ உரிமையாளர் உள்பட3 பேர் கைது
சேதுபாவாசத்திரம் அருகே கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை திருடி செல்ல முயன்ற ஸ்டுடியோ உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஊமத்தநாட்டில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன்னால் ஆன முத்துமாரியம்மன் சிலை உள்ளது. இந்த சிலை 25 கிலோ எடை கொண்டது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் 4 பேர் கோவில் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் உள்பிரகார கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை மட்டும் திருடிக்கொண்டு மீண்டும் சுற்றுச்சுவரில் ஏறி வெளியே குதித்தனர். அப்போது சத்தம்கேட்டு அருகில் உள்ள வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கண் விழித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் சிலையுடன் ஓடுவதை பார்த்து சத்தம்போட்டனர்.
சத்தம்போட்டு எழுந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கொள்ளையர்களை விரட்டி சென்றனர். இதில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். அவரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்தனர். பின்னர் பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் பூக்கொல்லை அருகே உள்ள ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெரியசாமி(வயது33) என்பதும் அவருடன் வந்தவர்கள் அறந்தாங்கி தாலுகா மாங்குடியை சேர்ந்த சத்தியராஜ்(30), சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கைவனவயலை சேர்ந்த கார்த்தீபன்(35), முட்ச்சிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ்(34) என்பது தெரியவந்தது.
மேலும் கோவிலில் உள்ள சிலையை திருட 1 வாரத்திற்கு முன்பே வந்து நோட்டமிட்டதும், சிலையை திருட 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வந்ததும், சிலையை தூக்கிக் கொண்டு ஓட முடியாததால் வயல்வெளியில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி மற்றும் தப்பி ஓடிய ஸ்டுடியோ உரிமையாளர் சத்தியராஜ், கார்த்தீபன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றுஅதிகாலை அந்த பகுதியில் பொதுமக்கள் சிலையை தேடி பார்த்தனர். அப்போது வயல்வெளியில் ஐம்பொன் அம்மன் சிலை கிடந்தது. அந்த சிலையை பொதுமக்கள் எடுத்து வந்து கோவிலில் வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் தொடர்புடைய சதீசை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story