போலி ஆவணங்கள் மூலம் ‘சிம்கார்டு’கள் வாங்கி அமெரிக்கர்களுக்கு விற்ற 3 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் ‘சிம்கார்டு’கள் வாங்கி அமெரிக்கர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை எல்லோகேட் துறைமுக பகுதியில் சம்பவத்தன்று சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை பிடித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரிடம் ‘ஆக்டிவேட்’ செய்யப்பட்ட 20 ‘சிம்கார்டு’கள் இருந்தன.
இதைத் தொடர்ந்து அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த ‘சிம்கார்டு’களை கைப்பற்றி அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த ‘சிம்கார்டு’கள் அனைத்தும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் போலி ஆவணங்கள் மூலம் ‘சிம்கார்டு’களை வாங்கி அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களுக்கு 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக அவர் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் ரகுநாத் மானே என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அவருடன் சந்திப் குப்தா, ரவி சிங் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story