தூய்மையே சேவை திட்டத்தில் கழிவறை கட்டும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு


தூய்மையே சேவை திட்டத்தில் கழிவறை கட்டும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையே சேவை திட்டத்தில் கழிவறை கட்டும் பணி கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தூய்மையே சேவை திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தின்கீழ் கழிவறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை அவசியம். திறந்த வெளியில் அசுத்தம் செய்யக்கூடாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே திருவாரூரை முழு சுகாதாரம் பெற்ற மாவட்டமாக மாற்ற முடியும். இவ்வாறு கலெக்டர் கூறினார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story