நெல்லையில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி நெல்லையில் அவரது உருவ படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை,

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலத்தில் சிவாஜிகணேசன் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.கே.வி. சிவகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சிவாஜி மன்றம்

நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள சிவாஜி மன்ற அலுவலகத்தில் சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற தலைவர் செல்வநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் இசக்கி முத்து முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் சிவாஜி மன்ற நிர்வாகிகள் சீனிவாசன், பழனி, பீர் முகமது, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story