சேலம் மாநகராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு 36 கைத்தெளிப்பான்கள்


சேலம் மாநகராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு 36 கைத்தெளிப்பான்கள்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு 36 கைத்தெளிப்பான்கள்

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புதிதாக 36 கைத்தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு சுகாதார பணியாளர்களுக்கு கைத்தெளிப்பான்களை வழங்கினார்.

பின்னர் இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 4 வாகன தெளிப்பான்கள் மற்றும் 24 கைத்தெளிப்பான்கள் மூலம் மருந்துதெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக 36 புதிய கைத்தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை கொண்டு 60 வார்டுகளிலும் மருந்துதெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். குடியிருப்பு பகுதி, பள்ளி, கல்லூரி வளாகங்கள், காலிமனைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மருந்துதெளிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்கள், உழவர் சந்தைகள், அம்மா உணவகங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், மாநகர நல அலுவலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story