சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை


சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

இதனை முன்னிட்டு புதுவை கருடிவக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில சிவாஜி பேரவை சார்பில் அண்ணா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சிவா எம்.எல்.ஏ., மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவாஜி பேரவை தலைவர் கமலக்கண்ணன், பொதுச்செயலாளர் வைத்தியநாதன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி ஸ்ரீதர், கிளை செயலாளர்கள் இளங்கோ, ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Next Story