உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை


உதவி பேராசிரியர், பேராசிரியர் வேலை
x
தினத்தந்தி 2 Oct 2017 1:34 PM IST (Updated: 2 Oct 2017 1:34 PM IST)
t-max-icont-min-icon

மத்திய கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தேசிய தொழில்நுட்ப மையம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. காண்டிராக்ட் அடிப்படையிலான உதவி பேராசிரியர் பணிக்கு 68 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 67 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 30 இடங்களும், பேராசிரியர் பணிக்கு 20 இடங்களும் உள்ளன. மொத்தம் மொத்தம் 185 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், இண்டஸ்ட்ரியல் புரொடக்சன், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, டிரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணிகள் உள்ளன.

பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. முழுமையான விவரங்களை www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 10-10-2017-ந்தேதி ஆகும். 

Next Story