மெர்க்கண்டைல் வங்கியில் பணி


மெர்க்கண்டைல் வங்கியில் பணி
x
தினத்தந்தி 2 Oct 2017 2:59 PM IST (Updated: 2 Oct 2017 2:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் தற்போது சார்ட்டடு அக்கவுண்டன்ட் (ஸ்கேல்-2) மற்றும் வேளாண்மை அதிகாரி (ஸ்கேல்-1) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது சார்ட்டடு அக்கவுண்டன்ட் (ஸ்கேல்-2) மற்றும் வேளாண்மை அதிகாரி (ஸ்கேல்-1) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

சி.ஏ. பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வேளாண் அதிகாரி பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 30-6-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

சி.ஏ. படித்தவர்கள் சி.ஏ. பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பட்டப்படிப்புடன், தோட்டக்கலை, அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங் படித்தவர்கள் வேளாண் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இரு பணிகளுக்கும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க 3-10-2017-ந் தேதி கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றுகளை இணைத்து The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628 002 என்ற முகவரிக்கு 9-10-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வைக்க வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.www.tmbnet.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 

Next Story