கேட் தேர்வின் அடிப்படையில் வேலை
‘கேட்’ தேர்வின் அடிப்படையில் பல்வேறு முன்னணி மத்திய அரசு நிறுவனங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
என்ஜினீரிங்/ தொழில்நுட்ப முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ‘கேட்-2018’ தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு வருகிற 5-10-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitg.ac.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். ‘கேட்’ தேர்வு முடிவு 17-3-2018 அன்று வெளியாகும்.
இந்த தேர்வை, பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்பும் தகுதித் தேர்வாக பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே கேட் தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணியிட அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளன. கடந்த வாரம் சில நிறுவனங்களின் பணி அறிவிப்பை பார்த்தோம். இந்த வாரம் மேலும் சில நிறுவனங்களின் பணி அறிவிப்புகளைப் பார்க்கலாம்...
பெல் :
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. மகாரத்னா அந்தஸ்துபெற்ற இந்த பொதுத்துறை நிறுவனம், கேட்-2018 தேர்வை அடிப்படையாகக் கொண்டு ‘என்ஜினீயர் டிரெயினி’ பணியிடங்களை நிரப்ப உள்ளது. மெக்கானிக்கல் பிரிவில் 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 20 இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த என்ஜினீயரிங் தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, இரட்டை பட்டப்படிப்பு படித்தவர்கள், 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் கேட் தேர்வு விண்ணப்ப பதிவெண்ணுடன், இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 2018 ஜனவரி 9-ந் தேதி பெல் இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும். விருப்பம் உள்ளவர்கள் www.careers.bh-el.in என்ற இணையதளத்தை பின்தொடர்ந்து விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பெட்ரோலிய நிறுவனம் :
இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் சுருக்கமாக எச்.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கேட் 2018 தேர்வின் அடிப்படையில் பட்டதாரி என்ஜினீயர்களை பணியமர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பம் 21-1-2018 அன்று இணையதளத்தில் செயல்பாட்டிற்கு வரும் 12-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை பார்க்க www.hpclcareers.com என்ற இணையதளத்தை பின் தொடரலாம்.
நிலக்கரி நிறுவனம் :
நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. நவரத்னா அந்தஸ்து பெற்ற இந்த மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் தற்போது கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் கேட் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. மெக்கானிக்கல், எல்கட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பம் 6-1-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும், 27-1-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.nlc.india.com என்ற இணையதளத்தை பின்தொடர்ந்து அறியலாம்.
மின்சார நிறுவனம் :
தேசிய அனல்மின் நிறுவனத்தின் (என்.டி. பி.சி.) கீழ் செயல்படும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் கேட் தேர்வின் அடிப்படையில் 15 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பிரிவில் படித்து கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-10-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nspcl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
உர நிறுவனம்:
நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் எனப்படும் தேசிய உர நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி தொழில்நுட்ப பணியிடங்களை 2018 கேட் தேர்வு அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெட்டீரியல்ஸ், கம்ப்யூட்டர்ஸ், ஐ.டி. போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த என்ஜினீயரிங் தொழில்நுட்ப பிரிவுகளில் படித்து கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிட விவரம் நிறுவன இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை www.ntionalfertilizers.com என்ற இணையதளத்தை பின்தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story