சென்டிரல் ரெயில் நிலையத்தில் 13 சவரன் நகையை தவறவிட்ட பெண் பயணி


சென்டிரல் ரெயில் நிலையத்தில் 13 சவரன் நகையை தவறவிட்ட பெண் பயணி
x
தினத்தந்தி 3 Oct 2017 7:00 AM IST (Updated: 3 Oct 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெண் பயணி தவற விட்ட 13 சவரன் தங்க நகையை ரெயில்வே போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்மலையா(வயது 36). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சுற்றுலா சென்றார்.

அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு ஐதராபாத் எக்ஸ்பிரஸ் மூலம் நேற்று காலை 7 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தனர்.
ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட அதிகமாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அப்போது ஸ்ரீகாந்த்மலையாவின் மனைவி தான் வைத்திருந்த ஒரு கை பையை ரெயில் நிலையத்தில் தவறவிட்டார். அந்த பையில் சுமார் 13 சவரன் தங்க நகைகள் இருந்தது.

வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏறும் போதுதான் தனது கையில் இருந்த பை காணாமல் போனதை உணர்ந்து, அது குறித்து கணவர் ஸ்ரீகாந்த்மலையாவிடம் அவர் கூறினார்.

இதையடுத்து அவர்கள் அலறி அடித்து கொண்டு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பிளாட்பாரத்தில் தவறவிட்ட பை கிடக்கிறதா?’ என தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பை கிடைக்காததால் அவர்கள் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்ற 5-வது பிளாட்பாரத்திற்கு சென்று தேடிப்பார்த்தனர்.

அப்போது ‘எஸ் 11’ பெட்டியின் அருகே ஒரு பை கிடந்தது. அதை சோதனை செய்தபோது, அது ஸ்ரீகாந்த்மலையா மனைவி தவறவிட்ட பை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பையை ஸ்ரீகாந்த்மல்லையா குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story