4 நாள் தொடர் விடுமுறை முடிந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
4 நாள் தொடர் விடுமுறை முடிந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி,
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வந்தது. விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் 4 நாள் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவரவர் வேலை பார்க்கும் ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று ஏராளமானவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் நேற்று மாலையில் இருந்தே பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து பஸ் நிலையத்திற்குள் வரவேண்டிய பஸ்கள் காலதாமதமாக வந்தன. பல பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வருவதற்கு அதிக அளவு நேரம் ஆகியது. இதனால் பல இடங்களில் ஆங்காங்கே பயணிகள் இறங்கி பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து பின்னர் வேறு பஸ் பிடித்து சென்றனர்.
பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்ததால் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, மாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இரவு 10 மணி வரை 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இன்னும் சிறப்பு பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.இதே போன்று சத்திரம் பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அதே போன்று திருச்சி ரெயில் நிலையத்திலும் அதிக அளவு ரெயில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற பயணிகள் நேற்று இரவு 8 மணிக்கே முதலாவது நடைமேடையில் குவியத் தொடங்கினர். பின்னர் அந்த ரெயில் இரவு 9-15 மணிக்கு முதலாவது நடைமேடையில் வந்து நின்ற போது, அதில் ஏறுவதில் பயணிகளிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

Related Tags :
Next Story