பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நல்லக்கண்ணு பங்கேற்பு


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நல்லக்கண்ணு பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

சானூரப்பட்டியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நல்லக்கண்ணு கலந்து கொண்டார்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சானூரப்பட்டியில் செங்கிப்பட்டி, உய்யக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியி்ன் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், காமராஜ், கண்ணகி, துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் சந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முகில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story