திருப்பதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் எடப்பாடி பழனிசாமியும் வருகை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருமலை வந்தார்.
திருமலை,
தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் குடும்பத்துடன் ஓய்வு எடுத்தார். நேற்று முன்தினம் இரவு அவரது பேரன் ஆதித்யாவுக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு, தீர்த்த பிரசாதங்கள், பெருமாள் படம் ஆகியவற்றை கோவில் அதிகாரிகள் வழங்கினர்.
எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள வராக சாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் அஷ்டதல பாத பூஜையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
முதல்-அமைச்சர் திருமலைக்கு வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story