ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்


ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:00 AM IST (Updated: 3 Oct 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்

கோவை,

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் டாக்டர் கருணா தலைமை தாங்கி பேசியதாவது:-

ஆஸ்பத்திரி மற்றும் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மருத்துவ கழகம் எனப்படும் புதிய முறையை கைவிட்டு பழைய இந்திய மருத்துவ கழகம் என்பதை தொடர வேண்டும். எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர் நடத்தப்படும் தேர்வை அமல்படுத்த கூடாது. காந்தி அகிம்சை வழியில் போராடியதால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவருடைய பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இந்திய மருத்துவ சங்க கோவை கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. 

Related Tags :
Next Story