முல்லுண்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கேணல் திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டம்


முல்லுண்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கேணல் திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2017 3:34 AM IST (Updated: 3 Oct 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

முல்லுண்டு மேற்கு சிவசேனா அலுவலகம் எதிரில் உள்ள விவேகானந்தர் சந்திப்பில், மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில், கேணல் திலீபனின் 30–வது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

மும்பை,

மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் வரவேற்று பேசினார். பொறுப்பாளர்கள் கென்னடி, பொன்கருணா, அமரன், மோகன், ஐயப்பன், செய்தி தொடர்பாளர் அந்தோணி ஆகியோர் பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழர் பாசறை செம்பூர் தலைவர் ஆ.பி.சுரேஷ், அசோக்குமார், மாரியப்பன், நாடோடி, சங்கரன், பழனிமுருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புதென்னரசு, மகிஅரசன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், ஆட்சி மொழி பாசறை ஒருங்கிணைப்பாளர் மறத்தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா, தண்ணீர் கேட்டு நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த விக்னேசு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story