காரில் சந்தனமர கட்டைகள் கடத்திய 4 பேர் சிக்கினர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
நத்தம் அருகே, காரில் சந்தனமர கட்டைகள் கடத்திய 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். பின்னர் அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நத்தம்,
நத்தம் அருகே சமுத்திராபட்டியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று அதிகாலை வேளையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் வந்தவர்கள் அது புதிதாக வாங்கப்பட்ட கார் என்றும், பதிவு எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து காரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரின் பின்பக்கம் சந்தனமர கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும், அதன் அருகில் ரம்பம், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் அய்யலூர் வடுகபட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 52), அருண் (27), சுந்தர் (29), பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த வெள்ளையன் (50) என்பதும், 125 கிலோ சந்தனமர கட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தனமர கட்டைகள், கார் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார் அதனை நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் பிடிபட்ட சுப்பிரமணி உள்பட 4 பேரையும் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் நத்தம் வனப்பகுதியில் இருந்து அவர்கள் சந்தனமரங்களை வெட்டி கட்டைகளாக்கி கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அவர் 4 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நத்தம் வனச்சரகர் பாண்டியராஜன், வனவர் கருணாநிதி ஆகியோர் சுப்பிரமணி உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கார், சந்தனமர கட்டைகள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story