அரசியல் கட்சிகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா காமராஜர் நினைவு தினமும் அனுசரிப்பு
திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
காந்தி ஜெயந்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினமும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் பல்வேறு கட்சிகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் பவனில் நடந்த விழாவிற்கு மாநகர தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கோபால்சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் வெள்ளிங்கிரி, கதிரேசன், கோபால் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தசாமி, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் நல்லூர், ராக்கியாபாளையம் பிரிவு, ஆகிய பகுதிகளிலும் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் காந்திநகரில் உள்ள தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விழாவுக்கு த.மா.கா.மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த நிர்வாகி சதாசிவம் கொடி ஏற்றினார். விழாவையொட்டி காந்தி மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க.ஜெ.தீபா அணி சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செந்தில்குமார் தலைமையில் மாநகராட்சி முன்பு உள்ள காந்தி சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சூப்பர்ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் காந்திஜெயந்தி விழா திருப்பூர் எம்.எஸ்.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றுகாலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ரகுராமன், துணைத்தலைவர் அமர்நாத், வடக்கு மாவட்ட பொருளாளர் கண்ணன், சங்கர்துரை ஆகியோர் முன்னிலைவகித்தனர். விழாவையொட்டி மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் நாகேந்திரன், மாநகர செயலாளர் ராம்குமார், சூப்பர்ஸ்டார்ஸ் மக்கள் கழக இளைஞரணி நிர்வாகிகள் முத்து, ராஜ், ஜெகன், சதீஸ்குமார், மகாராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story