பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வடலூரில் நடந்த விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
வடலூர்,
வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வடலூர் பசுமை இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.
வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவர் கோவி கல்விராயர் முன்னிலை வகித்தார். அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்திய ஞானசபை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது
கடலூர் மாவட்டத்தில் பசுமை திட்டத்தை உங்களை போன்ற பெரியோர்களின் சிந்தனையாலும், சமூக ஆர்வலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும், பொதுமக்களின் பங்களிப்பால் மட்டுமே செயல்படுத்த முடியும். தானே புயலின்போது கடலூர் மாவட்டத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மரங்கள் விழுந்தன. எனவே நாம் புயல், கனமழையையும் எதிர்கொண்டு தாங்கி நிற்கக்கூடிய வேம்பு, நாவல், பனை மரக்கன்றுகளை நட வேண்டும். மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது, அவை குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வளரும் வரையில் பாதுகாத்திடவும் வேண்டும்.
பசுமை மிக்க மாவட்டமாக...
இன்றைய தினம் சத்திய ஞானசபை, அய்யன் ஏரி, சுண்டுக்குழி ஏரி, காரப்பா ஏரி, வெங்கலத்து ஏரி ஆகிய இடங்களிலும் மரக்கன்றுகளை நடப்போகிறேன். இதுபோன்று மாவட்டத்தின் பல இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமை மிக்க மாவட்டமாக உருவாக்க வேண்டும். இதற்கு வடலூர் பேரூராட்சியை முன்மாதிரியாக உருவாக்க வேண்டும். பசுமை போற்றிய வடலூர் பேரூராட்சி என்று நீங்கள் அனைவரும் உங்களது ஒத்துழைப்பின் ஆதரவோடு உருவாக்கிட முடியும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பசுமை இயக்கத்தினை முழுமையாக வெற்றியடைய செய்து மாநில அளவில் பசுமை மிக்க மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓ.பி.ஆர். கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ், நுகர்வோர் சங்க மாநில செயலாளர் நிஜாமுதீன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் ஜான்சிராணி, தெய்வ நிலைய ஆணையர் கருணாகரன், வடலூர் பேரூராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், வடலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story