அரசு சார்பில் விழா: காந்தி சிலைக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மரியாதை
காந்தி ஜெயந்தியை யொட்டி அவரது சிலைக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பில் காந்தி ஜெயந்திவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் சர்வமத பிரார்த்தனை, பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
அமைச்சர் ஷாஜகான், கோகுலகிருஷ்ணன் எம்.பி., போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், அரசுத்துறை செயலாளர் சுந்தரவேடிவேலு மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் காந்தியின் உருவ சிலைக்கு துணைவேந்தர் அனீஷா பஷீர்கான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் தரணிக்கரசு, துணைப் பதிவாளர் முரளிதாசன், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி எம்.எல்ஏ.வும், துணை சபாநாயகருமான சிவக்கொழுந்து கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் இனிப்புகள், உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடைசி வரை பேசிக்கொள்ளவில்லை
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் நீடித்து வருகிறது. பல்வேறு பிரச்சினைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கவர்னர் கிரண்பெடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நாராயணசாமியும் பதிலடி கொடுத்து வந்தார். இதனால் அவர்களுக்கிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
இந்தநிலையில் அரசு சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள கவர்னர் கிரண்பெடி வந்த போது முதல்-அமைச்சர் நாராயணசாமி எழுந்து சென்று அவரை வரவேற்கவில்லை. இந்தநிலையில் நாராயணசாமிக்கு அருகில் ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கையில் கிரண்பெடி வந்து அமர்ந்தார்.
அப்போதும் அவருக்கு நாராயணசாமி வணக்கம்கூட தெரிவிக்கவில்லை. கடைசி வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் இல்லை. சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து தனித்தனியாக புறப்பட்டுச் சென்றனர்.

Related Tags :
Next Story