தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 3 Oct 2017 5:03 AM IST (Updated: 3 Oct 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் கணேஷ், மாவட்ட மகிளா பிரிவு தலைவி முத்துவிஜயா, மண்டல தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் அம்பிகாவதி, ராஜகோபாலன், ராஜசேகர், மாவட்ட பொது செயலாளர் மந்திர மூர்த்தி, பால்ராஜ், துறைமுக சபை ஐ.என்.டி.யு.சி. தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா.கட்சி சார்பில், நேற்று காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர தலைவர் காங்கிரஸ் எடிசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசிங், மாவட்ட துணை தலைவர் அம்பிகாபதி, மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், இளைஞர் அணி தலைவர் அருண் நேருராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மேல அரசடி வெள்ளப்பட்டி கிராமத்தில் உத்தமர் காந்தி, காமராஜர் சேவை மையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழ அரசடி கிராம காங்கிரஸ் தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். ஜெபமணி, தங்கக்கனி, பாக்கியம், ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ அரசடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேசுதாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 50 பேருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.



Next Story